shadow

இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆவாரா பிரணாப் முகர்ஜி?

இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 25ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால் அடுத்த குடியரசு தலைவருக்கான வேட்பாளரை தேர்வு செய்ய பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர முயற்சியில் உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் குடியரசு தலைவர் வேட்பாளர் பட்டியலில் பிரணாப் முகர்ஜி பெயரும் உள்ளதாம். ஆனால் பாஜக மீண்டும் பிரணாப் முகர்ஜியை குடியரசு தலைவராக தேர்வு செய்ய விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியபோது, ‘“பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள எங்கள் கூட்டணிக்கு குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதல்முறையாகக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை தவறவிட நாங்கள் விரும்பவில்லை. பிரணாப் முகர்ஜி மீது எங்களுக்கு எவ்வித விருப்பு வெறுப்பும் இல்லை. எனினும், நாங்கள் விரும்பிய வேட்பாளரை தேர்ந்தெடுப்பதன் மூலம் வரும் 2019 மக்களவை தேர்தலுக்கு அடித்தளம் அமைக்க விரும்புகிறோம். பிரணாபுக்கு மறுவாய்ப்பு அளிப்பது இதற்கு தடையாக இருக்கும் என்பதால் அதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஒத்த கருத்துடன் ஒரு வேட்பாளரை அறிவிக்க எதிர்க்கட்சிகளால் முடியவில்லை. எனவே அவர்கள் மீண்டும் பிரணாபை முன்னிறுத்த முயற்சிக்கின்றனர். இதுபோன்றவர்களால் எந்தக் கூட்டணியும் உருவாக்க முடியாது’ என்று கூறினார்.

பாஜக மட்டுமின்றி வேறு சில கட்சிகளும் பிரணாப் மீண்டும் குடியரசு தலைவர் ஆவதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. குறிப்பாக பிரணாபை ஆதரிக்க சோனியாவிடம் லாலு பிரசாத் யாதவ் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply