Chennai Today News

பாகுபலி 2: பிரபாஸ், அனுஷ்கா சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாகுபலி 2: பிரபாஸ், அனுஷ்கா சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாகி நான்கே நாட்களில் ரூ.400 கோடி வசூலை நெருங்கிவிட்டது. இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக தென்னிந்திய திரையுலகமே தலை நிமிர்ந்து நிற்கின்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய காரணகர்த்தாவாகிய ராஜமெளலி இந்த படத்தின் ஒரு பார்ட்னர் என்பதால் அவருக்கு இந்த படத்தால் கிடைத்த லாபம் என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் நடித்த மற்ற முக்கிய நடிகர், நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

பிரபாஸ்: சுமார் ரூ.50 கோடி

ராணா: ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி

அனுஷ்கா: ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி

தமன்னா: ரூ. 3 கோடி

ரம்யாகிருஷ்ணன்: சுமார் ரூ.3 கோடி

சத்யராஜ்: ரூ.3 கோடி முதல் 4 கோடி

நாசர்: ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!