shadow

பிரபாஸ், தமன்னா, பிரபுதேவா நடிப்பில் மீண்டும் ஒரு பிரமாண்டமான படம்

பிரபாஸ், தமன்னா நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் பெரும் வசூலை குவித்து வெற்றி படமாக விளங்கிய நிலையில் மீண்டும் பிரபாஸ் மற்றும் தமன்னா இணைந்து ஒரு இந்தி படத்தில் நடிக்கவுள்ளனர்.

‘உன்னை போல் ஒருவன்’, ‘பில்லா 2’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் ‘காமோஷ்’ என்ற திரைப்படம் இந்தியில் உருவாகி வருகிறது. இந்த படம் நயன்தாரா நடித்து வரும் ‘கொலையுதிர்க்காலம்’ படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடதக்கது.

பிரபுதேவா, தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிரபாஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. சிறப்பு தோற்றம் என்றாலும் இந்த படத்தின் கதைக்கு திருப்புமுனையான கேரக்டர் என்பதால் பிரபாஸ் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் இந்தியாவின் முதல் 8K ரெசலூசனில் உருவாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply