shadow

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது மின் வெட்டு ஏற்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே, மாநிலம் முழுவதும் அணைத்து நகரங்களிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலங்களில் கூட வெயிலின் வீச்சு அதிகமாகவே உள்ளது.

கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேசமயம், பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகங்களும் அறிவுறுத்தியுள்ளன.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், கடுமையான வெட்கை மற்றும் கொசுக்கடியால் பொதுமக்கள் அவதிகுள்ளாகியுள்ளனர்.

நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், தி.நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம்., அண்ணா நகர், நந்தனம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்து வரும் மின் தடையால், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply