விடுதலைப்புலி பொட்டு அம்மன் தமிழகத்தில் இருக்கின்றாரா? பரபரப்பு தகவல்

pottu ammanவிடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற இறுதிப்போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்பட பல முக்கிய தலைவர்கள் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் விடுதலைப்புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான்.

பொட்டு அம்மான் இறுதிப்போரில் கொல்லப்பட்டதாக 2014-ம் ஆண்டில் கூட்டுப் படைகளின்  தளபதியாக பணியாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரிய அதிகாரபூர்வமாக தெரிவித்த நிலையில் தற்போது பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக சிங்கள் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் குருடி என்ற பெயரில் பொட்டு அம்மான் தனது மனைவியுடன் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், அந்த செய்தி தெரிவித்துள்ளது. பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக கூறியபோதிலும் அவருடைய சடலம் மீட்கப்படாததால் இந்த செய்தியை பலர் நம்புகின்றனர். இலங்கை ஊடகத்தின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *