shadow

31-potato-curd-gravy

தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு – 10-12 (வேக வைத்து தோலுரித்தது)

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1/2 (பொடியாக நறுக்கியது)

சீரகம் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மல்லி தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் அதில் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும். பின் அதில் உருளைக்கிழங்கில் ஒரு ஓட்டை போட்டு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு தயிர் கிரேவி ரெடி!!!

Leave a Reply