shadow

மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமான 3 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை. அதிரடி தீர்ப்பு
pota
மும்பையில் கடந்த 2002-2003 ஆண்டுகளில் நடைபெற்ற 3 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்தனர். 139 பேர் படுகாயமடைந்தனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட சிமி என்ற அமைப்புதான் காரணம் என முடிவு செய்த மும்பை போலீஸ் சிமி அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சாகிப் நச்சான், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா இயக்க தீவிரவாதி பைசல் கான் உள்பட 25 பேர் மீது மும்பை தீவிரவாத தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.   இவர்களில் 5 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு வழக்குகள் ஒன்றாக தொகுக்கப்பட்டு, இதில் தொடர்புடைய 15 பேர் மீதும் கடந்த 2014-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 153 சாட்சிகளிடமும், எதிர்தரப்பு சாட்சிகளான 30 பேரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேர் இறந்து விட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த மாதம் 29-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் முக்கிய குற்றவாளியான முஸம்மில் அன்சாரி  உள்பட 10 பேர்களை குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். இருப்பினும் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் தீர்ப்பு நாளில் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், குற்றவாளிகள் முஸம்மில் அன்சாரி, பர்ஹான் கோட், டாகடர் வாஹிஹ் அன்சாரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து ’பொடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ்முக் இன்று உத்தரவிட்டுள்ளார். இதர ஏழு குற்றவாளிகளுக்கும் இரண்டாண்டு முதல் பத்தாண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சாகிப் நாச்சான் என்பவனுக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply