shadow

ttdதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் பக்தர்களின் நெரிசலை குறைக்கும் வகையில், நாளை முதல் ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் 58 தபால் நிலையங்களில் தரிசன டிக்கெட்டை விற்பனை செய்ய தேவதஸ்தான முடிவு செய்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் தினமும் சராசரியாக 65 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் ஒரு லட்சத்தை தாண்டுகிறது. இதனால் திருமலையில் தங்கும் விடுதிகள், தரிசன வசதி, லட்டு பிரசாதம் ஆகிய அனைத்துக்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை இ-தரிசன மையங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் வினி யோகிக்கும் திட்டம் ஏற்கனவே நல்லமுறையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் ரூ.50 சுதர்சன தரிசன டிக்கெட் ஆகியவைகளை சோதனை முறையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நாளை முதல் தபால் நிலையங்கள் மூலம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பி.வி.சுதாகர் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் சுலபமாக தரிசிப்பதற்கு ஏதுவாக, 5-ம் தேதி முதல் ஆந்திராவில் 29, தெலங்கானாவில் 29 தபால் நிலையங்களில் ரூ.300, ரூ.50 தரிசன டிக்கெட் விற்பனையை தொடங்க உள்ளோம்.மேலும் பல்வேறு திட்டங்களையும் நடை முறைப்படுத்த உள்ளோம் என்று கூறினார்.

Leave a Reply