sunny leoneகனடாவில் ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சன்னிலியோன் இந்தியாவில் பாலிவுட் படவுலகின் பிசியாக நடிகையாக தற்போது இருந்து வருகிறார். இவர் நடித்த படங்கள் பெரும் வசூலை வாரிக்குவித்த நிலையில் ‘ஏக் பஹலி லீலா’ என்ற பிரமாண்டமான திரைப்படம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் கவர்ச்சியின் உச்சக்காட்சியில் நடித்துள்ள சன்னிலியோன், ஒரு காட்சியில் சுமார் 100 லிட்டர் பாலில் குளிப்பது போன்ற ஒரு காட்சி வருகிறதாம். இந்த காட்சி சமீபத்தில் ராஜஸ்தானில் படமெடுக்கப்பட்டதாகவும், இந்த காட்சிகாக 100 லிட்டர் பால் படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சுற்றிலும் கவர்ச்சி உடையணிந்த பெண்கள் நின்றுகொண்டு சன்னிலியோனை பாலில் குளிப்பாட்டுவது போன்ற காட்சி சமீபத்தில் எடுக்கப்பட்டதாகவும், இந்த காட்சியின் படப்பிடிப்பின்போது இயக்குனர் மற்றும் கேமராமேன் தவிர ஆண் தொழில்நுட்பக்கலைஞர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இணையதளங்களில் இந்த டிரைலருக்கு பெரும் வரவேற்பு இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1vapJDi” standard=”http://www.youtube.com/v/azRVCV2k3Uc?fs=1″ vars=”ytid=azRVCV2k3Uc&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9863″ /]

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *