shadow

Procession_1702874f

சபரிமலை: ’மகரவிளக்கு’ நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருஆபரணங்கள் நேற்று பந்தளத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன. சபரிமலையில் நாளை மாலை ’மகர விளக்கு’ பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் ’மகரஜோதி’ தரிசனமும் நடக்கிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ’மகரவிளக்கு’ நாளில் பந்தளம் அரண்மனையில் இருந்து வரும் திருஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

பந்தள ராஜா: பந்தளம் அரண்மனையில் வளர்ந்த ஐயப்பன் சபரிமலையில் கோயில் கொண்டார். பந்தளம் மன்னர் அவரை காண ஆபரணங்களுடன் சென்றதாக ஐதீகம். இதை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பந்தளம் மன்னர் வம்சத்தினர் ஆபரணங்களுடன் பவனியாக சபரிமலை செல்வர்.

பந்தளத்தில்…: நேற்று பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து பவனி புறப்பட்டது. அதிகாலை 4:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக திருஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. பிற்பகல் 12:30 மணிக்கு ’உச்ச பூஜைக்காக’ நடை அடைக்கப்பட்டது. பந்தளம் மன்னர் பிரதிநிதி மகயிரம் திருநாள் கேரளவர்மா ராஜா முன்னிலையில் ஆபரணங்கள் மூன்று பேடகங்களில் அடைக்கப்பட்டன. பின் ’உச்ச பூஜை’ நடந்தது. பந்தளம் வலிய தம்புரான் ரேவதிநாள் ராமவர்மா ராஜா, உடைவாளை மன்னர் பிரதிநிதியிடம் கொடுத்தார். வானத்தில் கருடன் வட்டமிட, ஆபரண பவனி புறப்பட்டது. முக்கிய ஆபரண பெட்டியை குருசாமி கங்காதரன், பூஜை பாத்திரங்கள் பெட்டியை சிவன்பிள்ளை, கொடி பெட்டியை பிரதாப சந்திரனும் சுமந்து வந்தனர். மொத்தம் 23 பேர் கொண்ட குழுவினர் இந்த பெட்டிகளை சுமந்து செல்வர். நேற்று ஐரூர் புதியக்காவு தேவி கோயிலில் தங்கிய குழுவினர், இன்று லாகா சத்திரத்தில் தங்குவர். நாளை மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி, 6:15 மணிக்கு சன்னிதானம் வந்து சேருவர்.

sabarimalai_thiruvabharanam

சன்னிதானத்தில்…: சன்னிதானத்தில் நேற்று மாலை ’பிராசாத சுத்தி பூஜைகள்’ நடந்தன. ”இன்று மதியம் ’பிம்பசுத்தி பூஜைகள்’ நடக்கும். இதற்கு பின் ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடக்கும்,” என தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறினார். இன்று மாலை 6 மணிக்கு பின் பம்பையில், ’பம்பை விளக்கு’ நிகழ்ச்சி நடக்கிறது. மூங்கில் கம்பு களில்கோபுரங்கள் வடிவமைத்து அதில் விளக்குகள் ஏற்றி, அதை பம்பை ஆற்றில் மிதக்க விடுவர். நாளை பிற்பகல் 1:30 மணிக்கு ’உச்ச பூஜை’ முடிந்து நடை அடைக்கப்பட்டு, மாலை ? மணிக்கு மீண்டும் திறக்கும். மாலை 6:30 மணிக்கு திருஆபரணம் அணிவித்து ’மகரவிளக்கு’ தீபாராதனை நடக்கும். பின், பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவர்.

Leave a Reply