shadow

poojai songsதற்போதெல்லாம் அதிகாரபூர்வமாக பாடல்கள் படத்தின் தயாரிப்பாளரால் வெளியிடுவதற்கு முன்பே இண்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கத்தி படத்தின் செல்பி புள்ளே பாடல், ஐ படத்தின் டிரைலர் மற்றும் சில படங்களில் பாடல்களும் அவ்வப்போது இண்டர்நெட்டில் வெளியாகி வருவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

இந்நிலையில் நடிகர் விஷால் சொந்தமாக தயாரித்து தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கும் ‘பூஜை படத்தின் அனைத்து பாடல்களும் இண்டர்நெட்டில் வெளிவந்துள்ளதாக வந்துள்ள தகவலை அடுத்து விஷால், ஹரி, ஸ்ருதிஹாசன் ஆகியோர்கள் உள்பட படக்குழுவினர் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு திருட்டு டிவிடி கும்பலை பிடிக்க உயிரை விடவும் தயங்க மாட்டேன் என வீராவேசமாக அறிக்கை விட்ட விஷாலுக்கே இந்த கதியென்றால் மற்ற தயாரிப்பாளர்களுக்கு கேட்கவா வேண்டும்? விஷால் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸிலும் தனியார் துப்பறியும் நிபுணர் மூலம் விசாரணை நடத்தவுள்ளதாக விஷால் தரப்பினர் கூறுகின்றனர்.

பூஜை படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும், பாடலை பாடியவர்களின் பெயர்கள் மற்றும் பாடல்களை எழுதியவர்கள் பெயர் என விலாவரியாக இண்டர்நெட்டில் வெளியாகியுள்ளதால் விஷால் கடும் ஆத்திரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply