shadow

6நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதிலும், தமிழகத்தில் மட்டும் பாரதிய ஜனதா ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அந்த ஒரு வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்.

 கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு அவருக்கு எதிராக நின்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை தோற்கடித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.பி. இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 இன்று நாகர்கோவிலில் இருந்து கிளம்பிய பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் “நாடு முழுவதும் மோடி அலை வீசியதால் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது.

 மோடி தலைமையில் அமையும் அரசு இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் அமையும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மிகப்பெரும் வெற்றி நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்த வெற்றி.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணியின் தோல்விக்கு ஜெயலலிதாவின் நிறந்த நிர்வாகமும், தேர்தல் பிரச்சார யுக்திகளும்தான் காரணம். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Leave a Reply