shadow

தினகரன் அணியா? பாஜகவா? தடுமாறிய பிரபல வில்லன் நடிகர்

நாட்டாமை’ உள்பட பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் பொன்னம்பலம் அதிமுகவின் முன்னணி பேச்சாளராக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவர் எந்த அணிக்கு செல்வது என்ற தயக்கத்தில் இருந்தாராம்,

இந்த நிலையில் நேற்று தினகரன் அணிக்கு செல்ல முடிவு செய்ததாக கூறப்பட்ட நிலையில் திடீரென பாஜகவில் இணைந்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பாஜகவின் அடிப்படை உறுப்பினராக பதிவு செய்து கொண்ட பொன்னம்பலம் பின்னர் அனைவரும் கூறுவது போல் ‘பாஜகவால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். வேறு எந்தவொரு கட்சியாலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது’ என்று கூறியுள்ளார்.

பொன்னம்பலத்தை தினகரன் அணியினர் கண்டுகொள்ளாத காரணத்தாலும் வேறு ஒரு முக்கிய காரணத்தினாலும் பொன்னம்பலம் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply