முடிந்தது பொங்கல் விடுமுறை! அடுத்த விடுமுறை எப்போது?

பொங்கல் திருநாளையொட்டி நீண்ட விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த 11ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை அதாவது இன்று வரை கிட்டத்தட்ட பொங்கல் விடுமுறையாக விடுக்கப்பட்டுள்ளது. இடையில் 13 மற்றும் 14 ஆம் தேதி மட்டும் விடுமுறை எடுத்தவர்கள் 10 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து இன்று சொந்த ஊருக்கு சென்ற லட்சக்கணக்கானோர் சென்னை திரும்பவுள்ளனர். இதற்காக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில் இனிமேல் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்பதே கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விடுமுறை என்றாலும் அன்றைய தினம் ஞாயிறு என்பதால் அந்த விடுமுறையும் இல்லை

அதேபோல் பிப்ரவரி மாதம் முழுவதும் எந்த அரசு விடுமுறையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மார்ச் மாதத்திலும் கடைசியில்தான் அதாவது மார்ச் 25-ம் தேதிதான் தெலுங்கு வருடப்பிறப்பு வருவதால் அடுத்த விடுமுறைக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply