shadow

7 பேரின் விடுதலையை வைத்து அரசியல் நடத்த வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேர்களை விடுதலை செய்ய கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் தற்போது முடிவெடுக்கும் அதிகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கையில் உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘7 பேரின் விடுதலையை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்றும், 7 பேரின் இந்த நிலைக்கு காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளே காரணம் என்றும் கூறினார்.

மேலும் 7 பேரை விடுவிக்க கூடாது என காங்கிரஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டதாகவும், இந்த விவகாரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பதில் என்ன? என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதிப்போர் குறித்த கேள்விக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘இறுதிப்போர் குறித்து ராஜபக்சேவே சொல்லிவிட்டார், இனி பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா? என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்

பொன்.ராதாகிருஷ்ணன், பிரபாகரன் , காங்கிரஸ், திமுக

Leave a Reply