shadow

மீண்டும் இணைகிறது பொல்லாதவன்’ கூட்டணி
Daniel-Balaji-1
கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி மீண்டும் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ்-வெற்றிமாறன் இணையும் ‘வடசென்னை’ படத்தில் இணைந்துள்ளார்.

தற்போது விஜய் 60′ படத்தின் வில்லனாக டேனியல் பாலாஜி நடித்து வருகிறார். இந்நிலையில் ‘வடசென்னை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 23ஆம் தொடங்கவுள்ளதாகவும், முதல் நாளில் படப்பிடிப்பிலேயே டேனியல் பாலாஜி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யை 10 வருடங்களுக்கு பின்னர் சந்தித்த நிகழ்வு குறித்து டேனியல் பாலாஜி நெகிழ்ச்சியாக தனது டுவிட்டரில் ஒரு ஸ்டேட்டஸை சமீபத்தில் பதிவு செய்தார். மிக விரைவில் தனுஷுடன் மீண்டும் இணைந்தது குறித்து ஒரு ஸ்டேட்டஸை அவர் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply