கமல், ரஜினி களத்தில் இறங்கி போராட வேண்டும்: பிரபல நடிகை அறிவுரை

தமிழக அரசியலில் சினிமாத்துறையில் இருந்து ஒரே நேரத்தில் குதித்துள்ள கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் நடிகை விஜயசாந்தி அரசியல் அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். ரஜினியுடன் ‘மன்னன்’ மற்றும் கமலுடன் ‘இந்திரன் சந்திரன்’ படங்களில் நடித்துள்ள விஜயசாந்தி, 20 வருடங்களாக அரசியலில் இருப்பதால் அரசியலில் சீனியர் என்ற முறையில் இந்த அறிவுரையை அவர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக கடினமாக உழைக்க வேண்டும். அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல. நான் 20 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்து தெலுங்கானாவுக்காக போராடி இருக்கிறேன். இன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது.

ரஜினி, கமல் யார் வந்தாலும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும். நிற்கவேண்டும். இவை எல்லாம் கடினமாக இருக்கும். அதை அவர்கள் செய்ய வேண்டும் அப்படி செய்தால் அவர்களுக்கும் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *