shadow

விஜயகாந்துக்கு வைகோ கண்டனமா? மக்கள் நலக்கூட்டணியில் சலசலப்பு

vaikoசமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பத்திரிகையாளர்கள் முன்னில்லையில் தூ’ என துப்பிய விவகாரம் குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விஜயகாந்தை கடந்த சில நாட்களுக்கு முன்புவரை கூட்டணிக்காக அழைப்பு விடுத்த வைகோ, விஜயகாந்துக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நேற்று கலந்து கொண்டு பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ”தமிழ் குலத்திற்கு உலக அரங்கில் அடையாளம் பெற்றுத்தந்தவர் அண்ணா. அரசியலை தாண்டி தொலைநோக்கோடு அரசியல் நாகரீகம், அரசியல் தீண்டாமை போன்றவற்றுக்கு உதாரணமாகவும் அவர் திகழ்ந்தார்.

அண்ணா பின்பற்றிய அரசியல் நேர்மை, நாகரீகம், எளிமையான வாழ்க்கை தற்போதைய அரசியல்வாதிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அவருடைய சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்” என்று கூறினார்.

அரசியல்வாதிகள் நாகரீத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் பேசியதை விஜயகாந்த் துப்பிய விவகாரத்தை மனதில் வைத்துதான் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் நலக்கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply