shadow

manjhi-nitish1கடந்த சில நாட்களாக பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமாருக்கும், இன்றைய முதல்வர் ஜிதன்ராம் மிஞ்சி அவர்களுக்கும் இடிஅயே பனிப்போர் நீடித்து வந்தது. இதன் உச்சகட்டமாக நிதிஷ்குமார், மிஞ்சியை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தினார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்த மிஞ்சி, திடீரென சட்டசபையை கலைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இந்நிலையில் நிதீஷ்குமார் அதிரடியாக ஐக்கிய ஜனதா தள எம்.எல்.க்கள் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் நிதீஷ்குமார் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் நிதீஷ்குமார் மீண்டும் முதல்வராவர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் முதல்வர் பதவியில் இருந்து விலக முடியாது என மறுத்த பீகார் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ் இந்த அதிரடி நடவடிக்கையை இன்று எடுத்துள்ளார். இதனால் பீகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகாரில் மொத்தம் 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்தின் 111 எம்.எல்.ஏக்களில் 97 பேர் நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள். லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 24 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் என 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் நிதிஷ்குமாருக்கு இருக்கிறது. இதனால் தனிப் பெரும்பான்மைக்கு தேவையானதை விட, அதிகமாகவே நிதிஷ் குமாருக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. இருப்பினும் ஆளுநரின் முடிவு எப்படி இருக்கும் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Reply