shadow

‘தெறி’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம். அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
policeodu
இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 என 100% உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ஆடியோ ரிலீஸ் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெறி படத்தின் தெலுங்கு டப்பிங் படமான ‘போலீஸ் ஒஹ்டு’ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா இன்று ஐதராபாத்தில் நடைபெறவிருந்த நிலையில் திடீரென இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு மாநிலங்களில் உள்ள விஜய்ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த படத்தின் புதிய ஆடியோ ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 14ஆம், தேதி ‘தெறி’ படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஒருசில இடங்களில் ஏப்ரல் 14ஆம் தேதியே பிரிமியர் காட்சியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply