shadow

போயஸ் கார்டன் இல்லத்தில் ரிபப்ளிக் டிவி நிருபர்கள் தாக்கப்பட்டதாக வழக்கு

//www.youtube.com/watch?v=dGJo6PTklaQ

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று தீபா சென்றபோது தினகரன் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது

இந்நிலையில் போயஸ் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக, ரிபப்ளிக் டிவி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போயஸ் தோட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போயஸ் கார்டன் உள்ளே என்ன நடக்கின்றது என்பதை வீடியோ எடுக்க இரண்டு ரிபப்ளிக் டிவி நிருபர்கள் நுழைய முயன்றதாகவும் அப்போது அங்கு பாதுகாவலர் என்ற போர்வையில் நின்றிருந்த இரண்டு பேர் நிருபர்களை தாக்கியதோடு அவர்களுடைய கேமிராக்களும் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தீபாவின் அழைப்பின்பேரிலேயே தாங்கள் போயஸ் தோட்டம் சென்றதாகவும், தங்களை உள்ளே நுழைய விடாமல் பாதுகாவலர்கள் அத்துமீறி தடுத்ததாகவும் நிருபர்கள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply