shadow

ரஜினியுடன் காவல்துறை துணை ஆணையர் திடீர் சந்திப்பு: பரபரப்பு தகவல்

இன்று காலை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய பின்னர் தற்போது காவல்துறை துணை ஆணையர் சந்தித்து பேசியுள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட ஒரு சில சம்பவங்கள் காரணமாக ரஜினிகாந்த் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறையினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது

இதனை அடுத்து காவல்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசு அவர்கள் இன்று ரஜினியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தனக்கு காவல்துறை பாதுகாப்பு தேவையில்லை என்று ரஜினிகாந்த் கூறியதாக தெரிகிறது

ரஜினி வீட்டிற்கு சென்று காவல்துறை துணை ஆணையர் சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரஜினி, காவல்துறை, பாதுகாப்பு, அபுபக்கர்,

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *