shadow

bannerபெங்களூர் நீதிமன்றம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நிரபராதி என கூறி தீர்ப்பு அளித்ததாக காஞ்சிபுரத்தில் உள்ள அம்மா பேரவை துணைச்செயலாளர் ஒருவர் நகரின் முக்கிய இடத்தில் பேனர் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேனர் வைத்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என தமிழ்நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் காஞ்சிபுரம் மேற்கு வட்ட அம்மா பேரவை துணை செயலாளராக இருக்கும் பரிமளம் என்பவர், காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் அடங்கிய பேனர் ஒன்றை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த பேனரில் “பெங்களூரு நீதிமன்றம் அம்மாவை நிரபராதி என்று தீர்ப்பு” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. தீர்ப்பு வருவதற்கு முன்பே சர்ச்சைக்குரிய வகையில் பேனர் வைத்த  பரிமளத்தை காஞ்சிபுரம் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply