shadow

houseபாரத பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இந்தியாவில் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கு வீடு என்ற திட்டத்தை நிறைவேற்றுவோம் என உறுதியளித்துள்ளார். ஆனால் இந்த திட்டம் நடைமுறையில் சாத்தியமில்லை என்றும், நிறைவேற்ற முடியாத வெற்று வாக்குறுதியை பிரதமர் அளித்துள்ளார் என்றும் எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தற்போதுள்ள கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 11 கோடி பேர் வீடின்றி உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் அதாவது இன்னும் ஏழு வருடங்களுக்குள் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்றால் வருடத்திற்கு 1,57,14,285 வீடுகள் கட்ட வேண்டும். இன்னும் விரிவாக பார்த்தால் தினமும் 43,052 வீடுகள் கட்ட வேண்டும்.

தினமும்  43,052 வீடுகள் கட்டும் அளவுக்கு பணியாளர்கள், அவர்களுக்கு தேவையான திறன், கட்டுமான பணிகளில் உள்ள மேம்பாட்டு வசதிகள், உள்கட்டமைப்புகள் ஆகியவை இந்தியாவில் உள்ளதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த விஷயங்களை அரசு கவனித்தால் மட்டுமே இந்தியாவில் அனைவருக்கும் வீடு என்பது சாத்தியமாகும். ஒவ்வொரு பகுதியாக இந்த திட்டத்தில் செயல்பாட்டினை துவங்கினால் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், மத்திய அரசால் இதனை செய்து முடிக்க முடியும்.

எனவே பிரதமரின் இந்த திட்டம் நிறைவேற்றமுடியாத திட்டம், வெறும் விளம்பரத்திற்காகவே மோடி இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply