shadow

lee kuvan1சிங்கப்பூர் நாட்டின் தேசியத்தந்தை என்று போற்றபடுபவரின் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான ‘லீ குவான் யூ அவர்களின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு நாட்டின் தலைவர்களும் தங்கள் இறுதியஞ்சலியை செலுத்தினர்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் சுதந்திரம் பெற பெரிதும் காரணமாக இருந்த லீ குவான் யூ, மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் தனி நாடாகவும் பிரிய முக்கிய காரணமாக இருந்தார்.

கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்த அவர் கடந்த 23ஆம் தேத் மரணம் அடைந்தார். ஒரு சிறிய நாட்டின் தலைவரான லீ குவான் யூ அவர்களின் இறுதிச்சடங்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளின்டன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோத், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விதோதோ, மலேசிய அரசர் அப்துல் கலீம் ஷா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

லீ குவானின் உடல் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் சாலை, கன்டோன்மென்ட் சாலை, கிளமெந்தி சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாக பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதி ஊர்வலத்தில்ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, சிங்கப்பூர் முழுவதுமே நேற்று சோகமயமாக காட்சி அளித்தது.

லீ குவான் யூவின் இறுதிச் சடங்கு நடந்த நேற்றைய தினத்தில் இந்தியாவில் நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மேலும், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply