shadow

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார் பிரதமர் மோடி

modiபிரதமர் மோடி பதவியேற்ற நாளில் இருந்து இதுவரை பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்தியாவுக்கு முதலீடுகளையும் பல அரிய திட்டங்களையும் பெற்று வரும் நிலையில் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி சீனா செல்கிறார். அங்கு செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் 11-வது ஜி.20 மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். சீனாவில் உள்ள ஜியாங் மாகாணம் ஹாங் சூவு நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட ஜி. 20 கூட்டமைப்பில் உள்ள நாட்டின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

செப்டம்பர் 3-ந்தேதி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து சீனா புறப்படும் பிரதமர் மோடி செல்லும் வழியில் வியட்நாம் நாட்டுக்கு செல்கிறார். அந்நாட்டுக்கு இந்தியா சார்பில் ராணுவ உதவி, பொருளாதாரம், முதலீடுகள் உள்ளிட்டவை பற்றி பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார்.

ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்பு அக்டோபர் மாதம் வியட்நாம் பிரதமர் இந்தியா வந்தார். அப்போது இந்தியாவிடம் இருந்து பல்வேறு உதவிகள் கோரினார். அதை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடி வியட்நாமுக்கு வழங்கப்படும் உதவிகள் பற்றி அந்நாட்டு பிரதமரை சந்திக்கும் போது அறிவிப்பு வெளியிடுகிறார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்படுகிறது.

Leave a Reply