shadow

modi in kashmirபாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். பிரதமரை ஜம்மு காஷ்மீர் முதல்வர், ஆளுனர் மற்றும் ராணுவத்தளபதி ஆகியோர் வரவேற்றனர்.

காஷ்மீரில் ராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர், ‘சியாச்சின் பகுதியை எதிரிகளுக்கு விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், லெக் பகுதியில்  போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் பிரதமர் லடாக் மாவட்டத்தில் உள்ள லெஹ் என்ற பகுதியில், 45 மெகா வாட்  நீர்மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அங்கு அவர் உரையாற்றியபோது, ”என் மீது யாராவது அன்பு செலுத்தினால் அவர்களுக்கு பதிலாக வட்டியுடன் சேர்த்து மரியாதை கொடுப்பேன். இந்த பகுதி மக்களின் அன்பு என்னை ஈர்த்துள்ளது. இதனால் காஷ்மீர் மக்களுக்கு என்னால் அதிகபட்சமாக முடிந்ததை செய்வேன் என்று உறுதியளிக்கின்றேன்’ என்று கூறினார்.

மேலும் இந்த பகுதியில் உள்ள பிரகாஷ் (ஆற்றல்) பர்யவாரன் (சுற்று சூழல) பர்யதான் (சுற்றுலா) ஆகிய மூன்றும் மேம்படுத்தப்படும் என்றும் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இந்த பகுதியின் வளர்ச்சித்திட்டங்கள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும். நாங்கள் வாஜ்பாயின் கனவுகளை நிறைவேற்றுவோம்” என்றார்.

Leave a Reply