இந்தியாவுக்கு வாங்க: கமலா ஹாரீசுக்கு மோடி அழைப்பு

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் மோடி நேற்று கமலா ஹாரிஸ் அவர்களை சந்தித்து பேசினார்

அப்போது அவர் இந்தியாவுக்கு கமலா ஹாரிஸ் வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டதாகவும் விரைவில் அவர் இந்தியா வர இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

நேற்று அமெரிக்காவில் மோடி மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்

அப்போது பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த போது அமெரிக்கா உதவியதற்கு நன்றி என்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களின் இந்திய வருகையை கோடிக்கணக்கான இந்தியர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார்

கமலா ஹாரிஸ் , இந்தியா , மோடி