modiஇலங்கையின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள ஸ்ரீசேனாவுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்து அதிபர் மாளிகையில் இருந்தே வெளியேறியுள்ள நிலையில் புதிய அதிபராக மைத்ரிபாலா ஸ்ரீசேனா இன்று பதவி ஏற்கவுள்ளார். இலங்கையில் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சற்று முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், ”இலங்கையின் அமைதி, வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என்று தெரிவித்துள்ள மோடி, இலங்கையில் அமைதியாக தேர்தல் நடக்க காரணமாக இருந்த தமிழ் மக்கள் உள்பட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *