மீண்டும் வெளிநாடு செல்லும் பிரதமர்! இந்த முறை சீனா

பாரத பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவில் இருந்த நாட்களை விட வெளிநாட்டில் இருந்த நாட்கள் தான் அதிகம் என்று சமூக வலைத்தள பயனாளிகளும் எதிர்க்கட்சி தலைவர்களும் கூறி வரும் நிலையில் இன்று மீண்டும் அவர் சீனா செல்லவுள்ளார்.

சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சீனா செல்லவுள்ளார். சீனாவின் ஆதிக்கம் மிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா கடந்த ஆண்டு நிரந்தர உறுப்பினரானது. இந்த அமைப்பில் 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் மாநாடு சீனாவின் கிண்டாவ் நகரில் இன்று நடைபெறவுள்ளது. இன்று அங்கு செல்லும் பிரதமர், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுறது

இரு நாட்டு தலைவர்கள் சமீபத்தில் அரசுமுறை இல்லாத வகையில் சந்தித்து பேசினர். இதனை தொடர்ந்து இன்று முறைபடி அரசுமுறை சந்திப்பாக சந்தித்துப் பேசவுள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *