வரும் 11ஆம் தேதி முக்கிய ஆலோசனை

வரும் 11ம் தேதி மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்யவுள்ளதாகவும், ஊரடங்கு உத்தரவு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இன்று நடைபெற்ற அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தில், ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ள பிரதமர் , மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவை எடுப்பார் என தெரிகிறது

ஏற்கனவே தெலங்கானா உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளது என்பதால் 11ஆம் தேதி ஆலோசனையில் பெரும்பாலான மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்கவே ஆலோசனை கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply