பிளஸ் 2 தேர்வு முடிவு: முதலிடத்தை பிடித்தது விருதுநகர் மாவட்டம்

இன்று காலை 9.30 மணியளவில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியது. இந்த தேர்வில் வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களை விட அதிக சதவிகிதத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.1% பேரும், மாணவர்கள் 87.7% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1% குறைவு என்பது குறிப்பிடத்தக்க்கது.

இந்த நிலையில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் குறித்து பார்க்கும்போது விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளாது. இந்த மாவட்டத்தில் 97.05% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையடுத்து ஈரோடு -96.35%, திருப்பூர் -96.18%, நாமக்கல் – 95.75% தேர்ச்சி பெற்றுள்ளது. கடைசி இடத்தில் விழுப்புரம் மாவட்டம்(83.35%) உள்ளது

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1200 மதிப்பெண்களுக்கு 1180 மதிப்பெண்களுக்கு மேல் 231 பேர் எடுத்துள்ளதாகவும் இவர்களில் 50 பேர் மாணவர்கள், 181 பேர் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளஸ் டூ தேர்வு முடிவை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் முடிவுகள் தெரிந்துகொள்ளலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *