shadow

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று 11:30 மணிக்கு வெளியாக வெளியாக உள்ளன

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பதிவு செய்ய வேண்டும்

விடைத்தாள் நகல் ஒரு பாடத்திற்கு ரூபாய் 275, மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூபாய் 305 மற்ற பாடங்களுக்கு தலா 205 கட்டணம் செலுத்த வேண்டும்

இவ்வாறு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது