shadow

மே 17ஆம் தேதி +2 ரிசல்ட். தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
10tj result
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 13ஆம் தேதியும் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வுகளின் முடிவுகள் எப்போது வரும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தேர்தலுக்கு முன்னர் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 17ஆம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள் வெளியாகவுள்ளது. அதேபோல் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ஆம் தேதி காலை 9.31 முதல் 10 மணிக்குள் வெளியாகவுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply