shadow

pisasuஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை அடுத்து மிஷ்கின் இயற்றியுள்ள திரைப்படம் ‘பிசாசு’. இந்த படத்தை தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா தயாரித்துள்ளார். புதுமுகங்கள் நாகா, பிரயாகா மார்ட்டின் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆரோல் கரோலி என்ற புதுமுகம் இசையமைத்துள்ளார்.

பிசாசு படத்தை நேற்று சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு U/A சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். மறைந்த பழம்பெரும் இயக்குனர் ராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

இந்த படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. ரஜினியின் லிங்கா ரிலீஸான ஒரே வாரத்தில் பிசாசு வெளியாவதால் இந்த படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது சந்தேகம் என்று கோலிவுட்டில் கூறப்பட்டாலும், மிஷ்கின் தனது படத்தின் ரிலீஸ் தேதியில் உறுதியாக இருக்கின்றார்.

Leave a Reply