shadow

டாய்லெட் பேப்பரில் மணப்பெண் உடை தயாரித்த பெண்ணுக்கு பரிசு

அமெரிக்காவில் நடந்த மணப்பெண் அலங்கார உடைகள் குறித்த போட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஒரு டாய்லெட் பேபர்கள் கொண்டு தயாரித்த உடைக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்தவர் ராய் க்ரூஸ். இவர் நியூயார்க்கில் நடந்த திருமண அலங்கார உடை தயாரிக்கும் போட்டியில் கலந்து கொண்டார்.

14வது ஆண்டாக இந்த போட்டியில் சிறப்பாக ஆடை வடிவமைத்து 10ஆயிரம் டாலர் பரிசுத்தொகையை வென்று அசத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் திருமணத்தின் போது வெள்ளை நிற துணியில் ஆடை வடிவமைப்பது வழக்கம். ஆனால் க்ரூஸ் கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தை வைத்து உருவாக்கிய வெள்ளை நிற உடைக்கு பரிசு கிடைத்துள்ளது.

இவர் இது போன்று ஒரு உடை உருவாக்குவதற்கு 20 ரோல் டாய்லெட் பேப்பரை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply