பறக்கும் விமானத்தில் தூங்கிய விமானி. டுவிட்டரில் வெளிவந்த புகைப்படத்தால் சஸ்பெண்ட்

விமானம் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தை ஓட்டும் பொருப்பை பயிற்சி விமானியிடம் கொடுத்துவிட்டு சுமார் இரண்டு மணி நேரம் தூங்கிய விமானி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் விமானி ஒருவர், இஸ்லாமாபாத்தில் இருந்து லண்டனிற்கு விமானத்தை ஒட்டிச் சென்றுள்ளார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பயிற்சி விமானி ஒருவரிடம் விமானத்தை ஓட்டும் பொருப்பை ஒப்படைத்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியான பயிற்சி விமானி, சீனியர் விமானியை தட்டி கேட்க முடியாமல் விமானத்தை ஓட்டியுள்ளார். ஒருகட்டத்தில் கடுப்பாகி, தூங்கிய விமானியை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவு செய்துவிட்டார்.

இந்த புகைப்படம் டுவிட்டரில் காட்டுத்தீ போன்று பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 305 பயணிகள் விமானத்தில் இருந்த நிலையில் பொறுப்பு இன்றி பயிற்சி விமானியிடம் விமானத்தை ஒப்படைத்துவிட்டு தூங்கிய விமானி, லண்டனில் இறங்கும்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு பாகிஸ்தான் விமானத்துறை உத்தரவிட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *