shadow

download (5)

புவியின் இயல்பு, செயல்படும் விதம், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பற்றி படிக்க உதவும் இயற்பியலின் ஒரு பிரிவே புவி இயற்பியல் (geophysics). புவியின் வயது, அது தோன்றிய விதம், பூமிக்கடியில் புதைந்திருக்கும் பொருட்கள் மற்றும் அவற்றின் அளவுகள் ஆகியவற்றைப் பற்றி நாம் அறிந்துகொள்ள இந்த துறை பெரிதும் உதவுகிறது. மிகுந்த வேலைவாய்ப்புள்ள இத்துறையில் உள்ள கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

“இயற்கை வளங்களை கையாளுதல், அளவுக்கு அதிகமாக சுரண்டுவதைத் தடுத்தல், சுரண்டலால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றைப்பற்றி பயிற்றுவிக்கும் துறையே புவி இயற்பியல். இயற்கை வளங்களைச் சுரண்டுவதால் ஏற்படும் இயற்கைப் பேரழிவுகளை நமக்கு உணர்த்தி அவற்றை ஓரளவு கட்டுப்படுத்துவதற்கும், குறைப்பதற்கும் பெருமளவு உதவுகிறது. மாற்று வளங்களைப் பெருக்குவதிலும் கண்டறிவதிலும் முக்கியப் பங்காற்றும் துறை இது. இத்துறையை மாணவர்கள் தாராளமாக தேர்வு செய்யலாம். புவி இயற்பியல் துறை சார்ந்த
படிப்புகள்/பிரிவுகள்

1. Environmental Protection – சுற்றுச்சூழல் பாதுகாப்பு
2. Geophysical Survey – புவி இயற்பியல் களப்பணி
3. Gravimetric – எடை அளவியல்
4. Geothermal Energy – புவி வெப்ப ஆற்றல்        
5. Earthquake Engineering – நிலநடுக்கப் பொறியியல்        
6. Magnetism – காந்தவியல்
7. Radioactivity – கதிரியக்கம்
8. Gamma Spectrometry – அலைமாலை அளவியல்
9. Fluid Dynamics    – பாய்ம இயக்கவியல்
10. Mineral Physics    – கனிம இயற்பியல்

இந்தப் பிரிவுகளில் படிக்கலாம்

B.Sc., B.Tech., B.S., M.Sc., Ph.D., M.Tech., M.S., D.Phil., D.Sc.

புவி இயற்பியல் துறையைக் கொண்ட சிறந்த கல்வி நிறுவனங்கள்

1. மனோன்மணியம் சுந்தரனார் யுனிவர்சிட்டி, திருநெல்வேலி.
2. டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் யுனிவர்சிட்டி, ஆந்திரா.
3. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மும்பை, கோரக்பூர், ரூர்கி
4. பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி, வாரணாசி
5. நேஷனல் ஜியோபிசிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஹைதராபாத்
6. இண்டியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ், தன்பாத்
7. ஆந்திரா யுனிவர்சிட்டி, விசாகப்பட்டினம்
8. உஸ்மானியா யுனிவர்சிட்டி, ஹைதராபாத்

புவி இயற்பியல் துறை மாணவர்களை உற்சாகப்படுத்தவும், ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள்

1. தி பிரிட்டிஷ் ஜியோபிசிக்கல் சொசைட்டி, இங்கிலாந்து
2. ஜியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா, அமெரிக்கா
3. தி கனடியன் சொசைட்டி ஃபார் ஜியோபிசிக்ஸ், கனடா
4. அமெரிக்கன் ஜியோபிசிக்கல் யூனியன், அமெரிக்கா
5. ஆஸ்திரேலியன் சொசைட்டி ஜியோபிசிசிஸ்ட், ஆஸ்திரேலியா
6. பிரிட்டிஷ் ஜியோபிசிக்கல் அசோசியேஷன், இங்கிலாந்து
7. சௌத் ஆப்பிரிக்கன் ஜியோபிசிக்கல் அசோசியேஷன், ஜாம்பியா
8. சொசைட்டி ஆஃப் பெட்ரோலியம் ஜியோபிசிசிஸ்ட், இந்தியா
9. இரானியன் ஜியோபிசிக்கல் சொசைட்டி, ஈரான்
10. ஜியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் நியூசிலாந்து, நியூசிலாந்து

புவி இயற்பியல் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரங்கள்

1. ப்ரைஸ் மெடல், அமெரிக்கா
2. சாப்மேன் மெடல், இங்கிலாந்து
3. சார்லஸ் ஏ.விட்டன் மெடல், அமெரிக்கா
4. ஃபெலிக்ஸ் சாயெஸ் ப்ரைஸ், அமெரிக்கா
5. இங்கே லெஹ்மென் மெடல், அமெரிக்கா
6. கெய்த் ரன்கார்ன் ப்ரைஸ், அமெரிக்கா
7. யங் சயின்டிஸ்ட் அவார்டு, இந்தியா
8. கிருஷ்ணன் மெடல், இந்தியா
9. வில்லியம் போவி மெடல், அமெரிக்கா
10. வெட்லெஸின் ப்ரைஸ், கொலம்பியா

புவி இயற்பியல் துறை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள்

1. இன்ஸ்பையர் ஃபெல்லோஷிப், டி.எஸ்.டி, புதுடெல்லி
2. யங் சயின்டிஸ்ட் அவார்டு, டி.எஸ்.டி, புதுடெல்லி
3. ஃபெல்லோஷிப் ஃபார் ஓ.பி.சி, யு.ஜி.சி, புதுடெல்லி
4. ராஜிவ்காந்தி ஃபெல்லோஷிப், யு.ஜி.சி, புதுடெல்லி
5. ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, சி.எஸ்.ஐ.ஆர், புதுடெல்லி
6. மௌலானா ஆசாத் ஃபெல்லோஷிப் ஃபார் மைனாரிட்டி, யு.ஜி.சி, புதுடெல்லி
7. இந்திராகாந்தி ஃபெல்லோஷிப், யு.ஜி.சி, புதுடெல்லி
8. கேட் (GATE) ஃபெல்லோஷிப், இந்திய அரசு
9. ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ஐ.சி.ஏ.ஆர், புதுடெல்லி
10. ஸ்காலர்ஷிப் ஃபார் ஹையர் எஜுகேஷன், டி.எஸ்.டி, புதுடெல்லி

புவி இயற்பியல் துறை பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளும், உத்தேச மாத சம்பளமும்

1. சயின்டிஸ்ட் – 75,000 – 2,25,000
2. ரிசர்ச் ஃபெல்லோ – 25,000 – 30,000
3. ஜூனியர் சயின்டிஸ்ட் – 50,000 – 60,000
4. ரிசர்ச்சர் – 35,000 – 50,000
5. எக்ஸ்ப்ளோரர் – 55,000 – 75,000
6. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் – 35,000 – 50,000
7. டெக்னிக்கல் ஆபீசர் – 55,000 – 1,25,000
8. பேராசிரியர் – 35,000 – 1,50,000
9. குவாலிட்டி இன்ஸ்பெக்டர் – 30,000 – 50,000
10. சீனியர் ரிசர்ச்சர் – 50,000 – 75,000

புவி இயற்பியல் துறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள்

1. மினிஸ்ட்ரி ஆஃப் கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்ட்டிலைசர்ஸ், இந்திய அரசு
2. மினிஸ்ட்ரி ஆஃப் கோல், இந்திய அரசு
3. மினிஸ்ட்ரி ஆஃப் டிஃபென்ஸ், இந்திய அரசு
4. மினிஸ்ட்ரி ஆஃப் எர்த்் சயின்சஸ், இந்திய அரசு
5. மினிஸ்ட்ரி ஆஃப் மைன்ஸ் சயின்சஸ், இந்திய அரசு
5. மினிஸ்ட்ரி ஆஃப் நியூ அண்டு ரிநியூவெபிள் எனர்ஜி, இந்திய அரசு
6. மினிஸ்ட்ரி ஆஃப் பெட்ரோலியம் அண்டு நேச்சுரல்கேஸ், இந்திய அரசு
7. மினிஸ்ட்ரி ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, இந்திய அரசு
8. மினிஸ்ட்ரி ஆஃப் ஸ்டீல் அண்டு டெக்னாலஜி, இந்திய அரசு

இயற்கை வளங்களை கையாளுதல், அளவுக்கு அதிகமாக சுரண்டுவதைத் தடுத்தல், சுரண்டலால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றைப்பற்றி பயிற்றுவிக்கும் துறையே புவி இயற்பியல்

Leave a Reply