shadow

Police officers patrol at a security gate inside the main terminal of Frankfurt Airportஅமெரிக்க நகரங்களை தாக்க தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்ததன் காரணமாக அமெரிக்கவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இனிமேல் சார்ஜ் இல்லாத செல்போன், லேப்டாப்கள் ஆகிய பொருட்களை விமானப்பயணிகள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறப்பட்டுளது.

அமெரிக்காவுக்கு விமான சேவைகளை வழங்கும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் தீவிர சோதனைக்கு விமானப்பயணிகள் ஆளாவதால் பயணிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

சார்ஜ் செய்யப்படாத எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமின்றி அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங்களையும் பாதுகாப்புப் படையினர் அங்குலம் அங்குலமாக சோதனையிட்ட பின்னரே விமானத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.  இதுதவிர ஷூக்களில் குண்டுகளை மறைத்து எடுத்து வரலாம் என்ற செய்தி தற்போது விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதால் அனைத்து பயணிகளின் ஷுக்களும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் “எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும். இதே போல் பயணிகளின் ஷூக்களும் சோதனையிடப்படும். இந்த கூடுதல் சோதனைகளுக்கு பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாகவே அமெரிக்க விமான நிலையங் களில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a Reply