shadow

ஜெயலலிதா மரணம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய பி.எச்.பாண்டியன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருவதால் இதுகுறித்து சிபிஐ விசாரணை தேவை என கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கோரிக்கைகள் வைத்துள்ள நிலையில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்திற்கு பின் 27 சிசிடிவி கேமராக்களை அகற்றியது யார்? சிங்கப்பூர் எலிசபெத் ஹாஸ்பிடலில் அவரை அனுமதிக்கவிடாமல் தடுத்தது யார்?

அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்த போது, பதிவான சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும். குறிப்பாக ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டார் என அவரது டிஸ்சார்ஜ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விளக்கம் வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலில், ’பி’ படிவத்தில் கைநாட்டு வைக்க வேண்டிய அவசியம் என்ன ? ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்த மருத்துவரை விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 துளைகளுக்கு காரணம் என்ன? என்எஸ்ஜி பாதுகாப்பு இல்லாமல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது ஏன்? எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் வேண்டும் என்று பி.எச்.பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்கள் முன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply