shadow

இன்று முதல் டெல்லியில் சிஎன்ஜி இயற்கை எரிவாயு பொருத்தப்பட்ட கார்களுக்கு மட்டுமே அனுமதி

delhi_jam_2646108fஇந்திய தலைநகர் டெல்லி முழுவதும் இன்று முதல் பெட்ரோல் அல்லது டீசலில் ஓடும் டாக்ஸிகளை இயக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ளத தடுப்பதற்காக ஒற்றைப்படை பதிவு எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை பதிவு எண்கள் கொண்ட கார்களை இரட்டைப்படை தேதிகளிலும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் காரணமாக போக்குவரத்து பெருமளவு கட்டுப்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்று மாசுப்பாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் பெட்ரோல், டீசலில் ஓடும் தனியார் டாக்ஸிகள் அனைத்தும் சிஎன்ஜி இயற்கை எரிவாயுவுக்கு மாற்றப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், ஏப்ரல் 30-ம் தேதிக்குள் டாக்ஸிகள் அனைத்தும் சிஎன்ஜி.க்கு மாற்றப்பட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. இந்த காலக்கெடு நேற்று முன் தினத்துடன் முடிவுக்கு வந்துள்ளதால் இன்று முதல் சிஎன்ஜி இயற்கை எரிவாயு பொருத்தப்பட்ட கார்கள் மட்டுமே டெல்லி இயங்க அனுமதிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், டெல்லியில் ஓடும் அனைத்து டாக்ஸிகளையும் உடனடியாக சிஎன்ஜி.க்கு மாற்றும் அளவுக்கு தொழில்நுட்பம் இல்லை என்றும் எனவே காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தனியார் டாக்ஸி ஆபரேட்டர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இந்த வேண்டுகோள் நிராகரிப்பட்டது. எனினும், இந்த உத்தரவு ‘ஆல் இண்டியா பர்மிட்’ பெற்றுள்ள டாக்ஸிகளுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply