கொரோனா வைரஸ் எதிரொலி: பெட்ரோல் விலையில் என்ன மாற்றம்?

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய பங்குச் சந்தையில் நேற்று சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

அதுமட்டுமன்றி தங்கம் மற்றும் வெள்ளி விலையும் படு வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் கச்சா எண்ணெய் விலையும் வீழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியா கிஉள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சினை உலகம் முழுவதும் தீரும் வரை இந்த தாக்கம் இருக்கும் என்று கூறப்படுவதால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் பெட்ரோல் விலையையும் விட்டுவைக்கவில்லை இருப்பினும் கச்சா எண்ணெயின் விலை அதிக அளவு குறைந்தாலும் பெட்ரோலின் விலை மிகக் குறைவாகவே குறைந்துள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

இந்த நிலையில் ன்றைய பெட்ரோல் விலை குறித்து தற்போது பார்ப்போம்: இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து ரூ.74.68க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசுகள் குறைந்து ரூ.68.12க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply