shadow

petrol rateசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, மேலும் ரூ. 1 அல்லது அதற்கு மேலும் இந்த வார இறுதியில் குறைக்கப்படும் என நம்பகத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

சர்வதேச சந்தை விலைப்படி உள்நாட்டு பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இந்நிலையில் தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதால்அதன் எதிரொலியாக, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ. 1 குறைக்கப்படலாம் என எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், பெட்ரோல் விலையும் குறையும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இதற்கு முன்னர், கடந்த 1-ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.41-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.25-ம் குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply