shadow

petrol rateகடந்த சில நாட்களாக சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு பெற்றதை அடுத்து இந்தியாவில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.96 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.37 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலை நிர்ணயப்படி, பெட்ரோல் விலை ரூ.59.20ல் இருந்து ரூ.63.16ஆகவும், டீசல் விலை ரூ.47.20ல் இருந்து ரூ. 49.57ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும் போது 50 காசுகள் அல்லது 1 ரூபாய் மட்டும் விலையை குறைத்துவிட்டு, எண்ணெய் விலை அதிகரிக்கும்போது லிட்டருக்கு 4ரூபாய் வரை விலையுயர்த்தியுள்ள எண்ணெய் நிறுவனங்கள் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் இந்த விலையேற்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

Leave a Reply