shadow

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் விவகாரத்தில் திடீர் திருப்பம். மறுதேர்தல் நடத்தப்படுமா?

brexitஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் திடீரென மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று சுமார் 30 லட்சத்திற்கு அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதால் இதுகுறித்து நாளை கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கன்சர்வேடிவ் எம்.பி., பென் ஹவ்லெட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மறுதேர்தல் நடத்தப்பட்டால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் முடிவில் மாற்றம் இருக்கும் என கருதப்படுகிறது.

பிரிட்டன் பாராளுமன்ற இணையதளத்தில் வில்லியம் ஆலிவர் ஹீலே என்பவர் ஒரு மனுவை நேற்று முன் தினம் பதிவு செய்தார். அந்த மனுவில் ’வாக்குபதிவானது 75 சதவீதத்திற்கு குறைவாகவும், விலகுவது அல்லது இணைந்திருப்பது என்பதற்கான வாக்கு சதவீதம் 60 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும்பட்சத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்த வேண்டும்’ என்று பதிவு செய்திருந்தார். இந்த மனு பதிவு செய்யப்பட்ட 48 மணிநேரத்திற்குள் மூன்று லட்சத்திற்கு அதிகமானோர்களும், மொத்தம் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த மனுவிற்கு ஆதரவாக கையேழுத்திட்டுள்ளனர். பிரிட்டன் பாராளுமன்ற சட்டப்படி ஒரு மனுவிற்கு ஆதரவாக ஒரு லட்சம் பேர் கையேழுத்திட்டால், அந்த மனு குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் செய்யவேண்டும்.

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் 72.2 சதவீதம் வாக்கு பதிவானது. இதில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று 51.9 சதவீதம் பேர்களும் விலக வேண்டாம் என்று 48.1 சதவீதம் பேர் வாக்களித்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply