shadow

modi and ajayraiகடந்த பாராளுமன்றதேர்தலில் குஜராத் மாநிலம் வதேரா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். இந்நிலையில் வதேரா தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு வாரணாசி தொகுதியில் பெற்ற வெற்றியை மட்டும் தக்கவைத்துக்கொண்டார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியின் வெற்றியை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் நேற்று நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட் விதிமுறைகளை பின்பற்றாமல் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனது மனைவியின் வருமான விவரங்கள் மற்றும் பான் கார்டு குறித்த தகவல்களை நரேந்திர மோடி அளிக்கவில்லை என அந்த மனுவில் அஜய்ராய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நரேந்திரமோடியின் பிரசாரத்திற்காக ஒருசில தனியார் நிறுவனங்கள் கோடிக்கான ரூபாய் செலவு செய்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் வாரணாசியில் பல நாட்கள் சொகுசு பங்களாக்களில் தங்கி தேர்தல் வேலைகளை செய்துள்ளனர். மோடியின் பெயர் மற்றும் உருவம் பதித்த பனியன்கள், தொப்பிகள் பொதுமக்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்த மனு அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply