shadow

8075-281140-11-1பெரியபாளையம் அம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் விற்பனை செய்வதற்காக, களிமண் அடுப்புகள் தயாராகி வருகின்றன. சமையல் எரிவாயு, மின்சார அடுப்பு என, மக்களின் பயன்பாட்டிற்கு இடையே களிமண்ணால் செய்யப்பட்ட அடுப்புகளை பயன்படுத்துபவர்களும் உள்ளனர். அவர்களுக்காக, மண்பாண்ட தொழில் செய்பவர்களும் ஆங்காங்கே இருந்து வருகின்றனர். சோழவரம் அடுத்த இனாம் அகரம் கிராமத்தில், களிமண் அடுப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தொழிலில் ஈடுபட்டு உள்ள வெங்கடேசன் கூறியதாவது: பொங்கல் திருவிழாவின்போது, மண் அடுப்பு மற்றும் மண்பானைகள் அதிக அளவில் விற்பனையாகும்.

அதேபோல், ஆண்டுதோறும் ஆடிமாதம், பெரியபாளையத்தம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் ஒரு நாள் தங்கி செல்வதுண்டு. அவர்கள் சமையல் செய்ய மண் அடுப்புகளை பயன்படுத்துவர். அப்போது களிமண் அடுப்புகளின் விற்பனையும் அதிகரிக்கும். மற்ற சமயங்களில், ஒன்றிரண்டு விற்பனையாகும். இம்மாதம், 17ம் தேதி ஆடிமாதம் துவங்குகிறது. பெரியபாளையத்தில் விற்பனை செய்வதற்காக களிமண் அடுப்புகளை தயாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply