shadow

திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதம்; பரபரப்பில் தமிழகம்

பாஜக தேசிய செய்லாளர் எச்.ராஜா நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று லெனின் சிலை, நாளை பெரியார் சிலை என சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்திருந்த நிலையில் அவருக்கு எதிராக தமிழகமே கொதித்து எழுந்தது

இந்த நிலையில் தமிழகத்தில் முக்கிய இடங்களில் இருந்த பெரியாரின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன் இருந்த பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் இந்த சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *