மக்களவையில் இன்று தெலுங்கானா மசோதோ தாக்கல் செய்ய முற்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி ஒருவர் பாராளுமன்றத்தின் உள்ளே பெப்பர் ஸ்பிரே அடித்ததால், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருமிக்கொண்டே வெளியேறி சென்றனர். இதனால் பாராளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை மக்களவையில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் மிக ஆவேசமாக நுழைந்த சீமாந்திர எம்.பி. ராஜகோபால், தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து நாடாளூமன்றத்திற்குள் தெளித்தார். மிளகுப்பொடியின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், எம்.பிக்கள் பலருக்கும் தொடர்ச்சியாக இருமல் வந்தது. ஒருசிலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. அதன்பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட எம்.பிக்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

எம்.பி. ராஜகோபால் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் கமல்நாத் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply