shadow

dfef4617-f402-46e7-928f-5760f2908eb1_S_secvpf

தேவையான பொருள்கள் :

பட்டர் காளான் – 250 கிராம் 

பூண்டுப்பல் – 10 

மிளகுத்தூள் – 1 மேஜைக்கரண்டி 

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி 

கொத்தமல்லித்தழை – சிறிது 

உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி 

பெரிய வெங்காயம் – 1 

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* காளானை நன்கு சுத்தப்படுத்தி நீள வாக்கில் நறுக்கவும்.

* வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள பூண்டை போட்டு வதக்கவும்.

 பூண்டு வதங்கியதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

* வெங்காயம் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும். 

* பிறகு அதனுடன் காளானை சேர்த்து நன்கு கிளறவும்.

* காளான் வேகும் வரை இடை இடையே கிளறி கொண்டே இருக்கவும்.

 * காளான் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.

* சுவையான மிளகு காளான் ரெடி. 

Leave a Reply